தங்கப் பதக்கம் வென்ற மாணவியை வாழ்த்திய ஜனாதிபதி !

0
245

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இன்று (05) காலை மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது திறமைக்குப் ஜனாதிபதி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

தங்கப் பதக்கம் வென்ற மாணவி 

இதன்போது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக அவர் பெற்றுக்கொடுத்த தனித்துவமான வெற்றியினால் நாடு மிகவும் பெருமையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, அவரது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தனது ஆசீர்வாதத்தையும் தெரிவித்தார்.

மேலும், மாணவி தருஷி கருணாரத்ன நாட்டிற்கு வந்ததன் பின்னர் அவரைச் சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது மேலும் தெரிவித்தார்.