பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. டாஸ்க்கில் தோற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் மேக்கப்பினை களைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே தவைருக்கான டாஸ்க், ஆறு பேர் வெளியேற்றம், அதிரடி நாமினேஷன் என்று இந்த சீசன் ஆரம்பத்திலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பிக் பாஸ் சென்று கொண்டிருக்கின்றது.
சின்ன பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரத் தண்டனைக் காலத்திற்குச் செல்ல ஆறு பேர் தேர்வானார்கள். சின்ன வீட்டில் இருப்பவர்கள், பெரிய வீட்டில் இருப்பவர்களுக்குப் பல பணிகளைச் செய்து தர வேண்டும் என்பது தொடங்கிப் பல விதிமுறைகள் வெளியாகின.
மேலும் இந்த சீசனில் புதிய மாற்றங்களும் இருந்தன. இப்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில், பிக் பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார். தோற்றால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். பார்க்கலாம் இன்று இரவுதான் போட்டியாளர்கள் டாஸ்க்கில் வென்றார்களா? அல்லது மேக்கப் பொருட்கள் பறிக்கப்படுமா என்பது தெரியும்.