டயானா கமகேவை பெண் நாய் என கூறிய அமைச்சர்!

0
289

தன்னைத் தகாத வார்த்தை கொண்டு அழைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார மீது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

“என்னை மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் வைத்து பெண் நாய் (bitch) என கூறினார். உண்மையில் இது வார்த்தை ரீதியிலான பாலியல் துஷ்பிரயோகமாகும். இது நாட்டிலுள்ள 52 வீதமான பெண்களையும் அவமதிக்கும் செயலாகும்.

பெண்கள் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கின்றார்கள். இந்த எம்.பி க்களுக்கு பெண்களை அவமதிப்பதற்கான உரிமை கிடையாது. அவர் சிறப்புரிமைக்குழுவின் முன் கொண்டு வரப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும்” என டயானா கமகே தெரிவித்தார்.

டயானா கமகேவை பெண் நாய் என கூறிய அமைச்சர்! | Minister Who Called Diana Gamage A Female Dog