கர்நாடகாவிற்கே ஓடிவிட நினைத்தேன்… நடிகர் ரஜினிகாந்த்

0
297

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கர்நாடகாவுக்கே ஓடி விட நினைத்தேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். முரசொலி நாளிதழ் கட்டுரையில் இந்த தகவலை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

திமுக கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில், ரஜினிகாந்த் எழுதிய சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கருணாநிதி உடனான தனது பயணத்தை குறிப்பிட்டு பல தகவல்களை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டுள்ளார்.

”1980ல் நான் நடிக்கும் படத்துக்கு கருணாநிதி வசனம் எழுத ஒப்பு கொண்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. எளிமையான தமிழ் வசனங்களை பேசவே திண்டாடிய எனக்கு, கருணாநிதியின் வசனங்களை பேசுவதை எண்ணியதும் அதற்கு பதிலாக கர்நாடகாவுக்கே திரும்ப சென்று பேருந்தில் டிக்கெட் கொடுக்கலாம் என தோன்றியது.

அதனால் நானே கருணாநிதியிடம் சென்று வசனம் எனக்கு எழுத வேண்டாம் என பல கோணங்களில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.