நீளமாக முடி வளர்த்து ஹீரோ போல் தோற்றத்தில் தோனி!

0
188

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவர் 2007 காலக்கட்டத்தில் நீளமான முடியை வளர்த்தபடி கிரிக்கெட் விளையாடினார்.

அவரின் அப்போதைய ஹேர் ஸ்டைல் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. பின்னாளில் தலைமுடியை வெட்டி குறைந்த முடியுடனே வலம் வந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நீளமான தலைமுடியை தோனி வளர்த்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சினிமா ஹீரோ போன்று தோனி இருக்கிறார் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.