மின்னல் வேகத்தில் நகரும் ரயில்; “ஒன் 2 ஒன்” படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியானது

0
203

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K. திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2 ஒன்” படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும் கீழும் கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர். C, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது.

ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான சினிமா விருந்துள்ளது என்பதை இந்த போஸ்டர் உறுதிப்படுத்துகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், ட்ரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.