பாகிஸ்தான் இரட்டை குண்டுவெடிப்பிற்கு இந்தியாவே காரணம் – பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்

0
205

பாகிஸ்தானில் கடந்த இறுதினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரட்டை குண்டுபிடிப்பு சம்பவத்திற்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்பராஸ் புக்டி தெரிவித்துள்ளார்.

கடந்த 29ம் திகதி பாகிஸ்தானில் தென்மேற்கு மாகாணத்தில் பலூசிஸ்தானின் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுமார் 65 போ் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

மஸ்துங் நகரில் நடைபெற்ற மத வழிபாட்டை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அந்நாட்டின் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி இந்த இரட்டை குண்டுவெடிப்பிற்கு இந்தியா தான் காரணம் என தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.