வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை முன்வைப்பு..

0
361

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இராஜாங்க அமைச்சர ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வரவு செலவு திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர தெரிவித்துள்ளார்.