தமிழகத்தில் உடைந்த அதிமுக – பாஜக கூட்டணி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
280

பாஜகவுடன் கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. அண்மை நாட்களாக அதிமுக – பாஜக கூட்டணிக்குள் மோதல் நிலவி வருகிறது.

BJP and ADMK

இதனால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் இன்று கூட்டம் நடந்த போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினர்.

இதையடுத்து பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.