முதலாம் திகதி முதல் குறுஞ்செய்தி மூலம் நீர் கட்டணம்…

0
195

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நாட்டின் சில பகுதிகளின் நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டணங்களை அனுப்ப தீர்மானித்துள்ளது. 

முன்னதாக அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இலத்திரனியல் முறையில் கட்டண விபரத்தை வழங்கும் மாற்றத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் நுகர்வோர் தமது மாதாந்த கட்டணத்தை குறுஞ்செய்தி ஊடாக பெற்றுக்கொள்ளவார்கள் என சபை தெரிவித்துள்ளது.

குறிப்பிடப்பட்ட பகுதிகளின் நுகர்வோர் எதிர்வரும் முதலாம் திகதி (01.10.2023) தொடக்கம் குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டண விபரங்களைள பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் முறையில் கட்டணப்பற்றுச்சீட்டை வழங்கும் புதிய நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இலத்திரனியல் முறையில் கட்டணப்பற்றுச்சீட்டை வழங்கும் மாற்றத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம் | E Billing Water Bill In Sri Lanka

தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் புதிய நடைமுறை

இதேவேளை இந்த புதிய நடைமுறையானது முதலில், தெரிவு செய்யப்பட்ட 4 ஒழுங்குமுறை பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.