நடிகை ஆண்ட்ரியாவுடன் தனது படத்தை எடிட் செய்து போட்ட யாழ் அரச ஊழியர்!

0
244

அண்மையில் தென்னிந்திய நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்துக்கு விஜயம் செய்து ஆலய முன்றலில் நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த அங்கிள் வயதாகியும் திருமணமாகாத அரச ஊழியர் ஒருவர் குறித்த படத்தில் தனது மட்டுமட்டான போட்டோசொப் செயலியில் அறிவை பயன்படுத்தி தனது படத்தை இணைத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியாவுடன் தனது படத்தை எடிட் செய்து போட்ட யாழ் அரச ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்! | Actress Andrea Jeremiah Visit Jaffna Govt Employee

குறித்த படமானது அவரின் நண்பர்கள் மட்டத்தில் பிரபலமாகி அப்படத்தின் ஸ்கிரீன்ஷாட் ஆனது குறித்த ஊழியர் வேலை செய்யும் அலுவலக வாட்ஸ்ஆப் குழுவில் பகிரப்பட்டது.

அதனை பார்த்த அந் நிறுவனத்தின் பெண் நிர்வாக உத்தியோகத்தர் குறித்த ஊழியரை அடுத்த நாள் அலுவலகம் ஆரம்பமான உடனேயே பலர் மத்தியில் வைத்து சாரமாரியாக தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எடிட்டிங் படத்தில் கூட தனக்கு பெண் பொருத்தம் இல்லை என மனவருத்தத்தில் குறித்த ஊழியர் உள்ளதாக தெரிவித்துள்ளாராம்.