பேருந்தை வழிமறித்து பயணியை கடத்திய கும்பல்!

0
249

கம்பளையில் நபரொருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை ஜயமாலபுர பகுதியில் பேருந்தில் பயணித்த போதே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட நபர்

வேன் ஒன்றில் பிரவேசித்த குழுவொன்று இன்று காலை 6 மணியளவில் கம்பளையிலிருந்து மாவெல பகுதியை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றை வழிமறித்து அதில் பயணித்த பயணி ஒருவர் மீது ஆயுதமொன்றினால் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் வேனில் வந்த குழுவினர் அந் நபரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நபர் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்றில் சாரதியாக பணியாற்றிவருபவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.