பெர்சி அபேசேகரவின் மருத்துவச் செலவுக்காக இலங்கை கிரிக்கெட் சபை 5 மில்லியன் ரூபாவை நன்கொடை

0
238

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி மற்றும் தீவிர ஆதரவாளராக கருதப்படும் பெர்சி அபேசேகரவின் மருத்துவ செலவிற்காக இலங்கை கிரிக்கெட் சபையினால் 5 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முன்னணி மற்றும் தீவிர ஆதரவாளராக கருதப்படும் பெர்சியின் பங்களிப்பு அளவிட முடியாதது எனவும் அவரது உடல்நலத்தில் அக்கறை கொள்வது எமது கடமையாகும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் பெர்சி அபேசேகரவை அவரது வீட்டில் சென்று சந்தித்து 5 மில்லியன் ரூபாய் காசோலையை இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது