முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து 9 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

0
204

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 7வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுபணியின் போது 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிற்க்கப்பட்டுள்ளது.

புதைக்குழியில் இருந்து இதுவரை 9 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த ஆறாம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 9 மனித எலும்புக்கூடுகள் மீட்பு | 9 Human The Mullaitivu Kokkuthuduai Burial Pit

இந்தநிலையில் 7 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

அகழ்வு பணிகள் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், தடயவியல் காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.