கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட இளம் காதல் ஜோடிகள்.. பொலிஸார் கைது

0
346

கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட பல இளம் ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை கலிடோ கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 35 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான எச்சரிக்கை

இவர்களில் களுத்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சிறார்கள் அனைவரும் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.