யாழில் தையிட்டியில் காணி அளவிடும் பணி இடைநிறுத்தம்

0
222

யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியினை அளவிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் காணி அளவீடு மேற்கொள்ளப்படவிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அத் திட்டத்தை தடுத்து நிறுத்த மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையில் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியினை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், மற்றும் பொது மக்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் தையிட்டியில் காணி அளவிடும் பணி இடைநிறுத்தம் | Temporary Suspension Of Land Surveying In Tahiti