ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பாராளுமன்றத்தில் தீர்வு தேடுவது நகைப்புக்குரியது – இம்தியாஸ்

0
219

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணை இன்றி பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வுகாண முயல்வது கேலிக்கூத்தான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையானது மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை அதிகரித்து தீர்வுகள் நசுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மல்வத்து அஸ்கிரிய பீடத்திற்கு தனது ‘சிதமு’ நூலை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியதுடன், ஜனாதிபதியும் இந்த நிலைப்பாட்டில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவரும் இந்த கருத்தையே கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தின் இருப்புக்கு சவால் விடும் சமூகம் தீவிரவாதத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்த தருணத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க அனைவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.