ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடியில் மலிவான அரசியல் செய்வதாக அவரது மகள் கதீஜா வேதனை தெரிவித்துள்ளார்.
மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டதால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பல ஆயிரங்கள் கொடுத்து டிக்கெட் வாங்கியும் ரசிகர்கள் அரங்கினுள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் ஏ.ஆர்.ரகுமான் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இது குறித்து ரகுமானின் மகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100% காரணம். ஆயினும் ஏ.ஆர்.ரகுமான் அதற்காக முழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான், 2015 பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு சென்னை மதுரை கோவை மாவட்டங்களில் நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சி நடத்தியவர், கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவியவர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவியவர், திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தியவர். அவர் குறித்து அவதூறாக பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள் என பதிவிட்டுள்ளார்.
https://x.com/RahmanKhatija/status/1701220781165039950?s=20