திருமணம் முடிந்து ஒரே வாரத்தில் பரிதாபமாக உயிரிழந்த புதுமண தம்பதி..

0
233

அம்பாந்தோட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும், மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை , வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் திருமணம் முடித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரமொன்றுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

திருமணம் முடிந்து ஒரே வாரத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம் | Accident Death In Newly Married Couple

உயிரிழந்த தம்பதியினர்

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 31 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 28 வயதுடைய மனைவி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருவரும் வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில் புதுமணத் தம்பதியினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.