மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம்

0
235

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து வடகிழக்கு கடற்பரப்பில் 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இன்று (11.09.2023) அதிகாலை 1.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் | Earthquake Near Batticalo Sri Lanka