இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் கலந்துரையாடல்

0
304

சர்வதேச கடன் வழங்குநர்கள் அடுத்த வாரம் கூடி இலங்கை போன்ற நாடுகளின் மறுசீரமைப்பு திட்டங்களில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பையும் இணைப்பது தொடர்பில் விவாதிக்கவுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

இரண்டு முக்கிய தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஜி-20 நாடுகளின் பிரதிகளின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் (15.09.2023) ஆம் திகதி சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மொரோக்கோவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டம் எதிர்வரும் ( 09.10.2023) முதல் (15.09.2023) வரை இடம்பெறவுள்ளது.

அதன்போது மேலதிக விடயங்கள் குறித்து ஆராயப்படும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை மற்றும் கானா போன்ற நாடுகள் அவற்றின் உள்நாட்டு கடனில் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சர்வதேச கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்பின் போது உள்நாட்டு கடன் வழங்குநர்களுடன் சுமையை பகிர்ந்து கொள்வதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடல் | Discussion On Sri Lanka S Debt Restructuring

இது கடன் மறுசீரமைப்புக்கான சவால்களாக அடையாளம் காணப்பட்ட பல சிக்கல்களில் ஒன்றாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் உத்தியோகப்பூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள், கடன் பெறும் நாடுகள், உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.