இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி செனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தொடர்ச்சியாக செனல் 4 என்பதற்கு பதிலாக செனல் ஐ என உணர்ச்சி பொங்கிய உரையாற்றினார்.
செனல் 4 இல் வெளியான ஈஸ்டர் தின தாக்குதல் குறித்த ஆவணப்படம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்,

பெயரை மறந்த அமைச்சர்
”செனல் ஐ ற்கு ராஜபக்சேக்களுடன் தனிப்பட்ட வன்மம் இருந்தது. இது பற்றி நாட்டிலுள்ள அனைவரும் அறிவர். இலங்கையில் நடந்த போர் குறித்து செய்தி வெளியிடும் போது புலிகள் செய்ததை அரச ராணுவம் செய்தது என ‘சனல் ஐ’ செய்தி வெளியிட்டது” என இராஜாங்க அமைச்சர் பேசினார்.
அமைச்சரின் பேச்சை கவனித்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ”அது செனல் ஐ இல்லை. செனல் 4” என திருத்தியவுடன் உடனடியாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் அதைத் திருத்திக்கொண்டு மன்னிப்புக் கோரினார்.