செம்மணிப் படுகொலையின் 27வது நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (07.09.2023) மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவிற்கு அண்மையில் நடைபெற்றது. செம்மணிப் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




