நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்து வந்தனர். சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சுமுகமாக செல்வதாக கூறியதால் சீமானை காவல்துறை கைது செய்யாமல் இருந்தனர்.
இந்நிலையில் சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரில் அவரை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகாரளித்தார்.
இதனடிப்படையில் மீண்டும் விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னை 6 முறை வற்புறுத்தி கட்டாய கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் காவல்துறையினர் விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் கருக்கலைப்பு செய்யப்பட்ட மருத்துவரிடமும், கருக்கலைப்பு செய்வது தொடர்பாக கையெழுத்திட்ட நபரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.