43 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை கெளசல்யா சொன்ன நெகிழ்ச்சி காரணம்

0
255

தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கெளசல்யா.

‘காலமெல்லாம் காதல் வாழ்க’, ‘பூவேலி’, ‘நேருக்கு நேர்’, ‘ஜாலி’, ‘பிரியமுடன்’, ‘சொல்லாமலே’, ‘உன்னுடன்’, ‘வானத்தைப்போல’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

கெளசல்யாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

Kousalya

இதுகுறித்து கெளசல்யா கூறும்போது, ”நான் திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆனாலும் திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கும் அளவுக்கு சரியான நபரை சந்திக்கவில்லை.

நான் எதிர்பார்க்கும் ஒருவரை சந்தித்து இருந்தால் நிச்சயம் திருமணம் செய்து இருப்பேன்.

நான் பெற்றோரோடு ஒன்றி வாழ்ந்ததும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு காரணம். நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. அவர்களை பிரிந்து என்னாலும் இருக்க முடியாது” என கூறியுள்ளார்.