தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வந்த நிலையில் தற்போது இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
லைகா புரெடெக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
இதனை தொடர்ந்து ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் கதாநாயகனாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா ஆகிய மூவரில் ஒருவர் ஜேசன் இயக்கும் முதல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வெளியிட்டுள்ளார்.