டுபாயில் சிக்கித் தவித்த இலங்கையர்கள்; நெகிழ வைத்த ஸ்ரீலங்கன்

0
224
Commercial aircraft cabin with rows of seats down the aisle. morning light in the salon of the airliner. economy class

டுபாயில் வேலைக்காக சென்று விட்டு, நாடு திரும்ப விமானப் பயணச்சீட்டு வாங்க முடியாமல் தவித்த 40க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உதவி செய்துள்ளது.

டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துடன் இணைந்து இலங்கையர்களை மிகக் குறைந்த செலவில் பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்து வருகிறது.

அங்கு தங்கியுள்ள இலங்கையர்களை குழுக்களாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில், முதலாவது குழுவானது UL 226 என்ற விமானத்தில் கடந்த 23ஆம் திகதியன்று இலங்கையை வந்தடைந்தது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைந்தது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. “நாங்கள் எந்த நம்பிக்கையும் இல்லாத ஒரு உதவியற்ற சூழ்நிலையில் இருந்தோம். ஆனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் எங்களுக்கு உதவ முன்வந்தன.

வெளிநாட்டில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் : நெகிழ வைத்த ஸ்ரீலங்கன் | Sri Lanka Airline Tickets Offer Dubai Workers

அதற்காக நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மீண்டும் இலங்கைக்கு வர முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என இலங்கை வந்த முதலாவது அணியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.