அஜித்தா? விஜய்யா? சட்டென ஒரு பெயரைச் சொன்ன நடிகர் எஸ்.ஜே சூர்யா

0
244

வாலி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே போன்ற திரைப்படங்களை இயக்கிய அவர் முழு நேர நடிகரானார்.

வில்லன் நடிப்பில் தனித்துவத்தை காட்டி ரசிகர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்றுள்ள எஸ்.ஜே சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

நடிகர் விஷாலுடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வரும் 15 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த பல நேர்காணல்களில் அவர் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் எஸ்.ஜே சூர்யா பங்கேற்ற ஒரு நேர்காணலின் போது அவரிடம் அஜித்தா? விஜய்யா? ஒரு பெயரை சொல்லும்படி தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு அவர் அஜித் தான்..! ஏனெனில் அவர் தான் நான் இயக்குனராக முதல் வாய்ப்பை ‘வாலி’ திரைப்படத்தில் கொடுத்தார்.

நான் அவரிடம் படம் கேட்கவில்லை. அவராகவே தான் “நீ ஏன் இன்னும் துணை இயக்குனராகவே இருக்கிறாய். இயக்குனராக மாறு” என கூறி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.