கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான ’ரோஜா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. பின்னர் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் திரையுலகில் நுழைந்து வில்லன் நடிகராக கலக்கி வருகிறார்.
அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை சின்னத்திரை நடிகரான டெல்லி குமார் முதல்முறையாக மகன் குறித்து அண்மை பேட்டியில் பேசியிருக்கிறார்.

டெல்லிகுமார் கூறுகையில், “என்னுடைய மகன் தான் அரவிந்தசாமி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அவர் பிறந்ததுமே என்னுடைய அக்காவிற்கு குழந்தை இல்லாததால் தத்து கொடுத்து விட்டேன்.
அதற்குப் பிறகு அவர் அதிகமாக என்னிடம் ஒட்டிக் கொண்டது கிடையாது. குடும்ப நிகழ்ச்சி போன்ற முக்கியமான நேரங்களில் வருவார். ஏதாவது தேவை என்றால் பேசிக்கொண்டு கிளம்பி விடுவார்.
அவரை அளவுக்கு அதிகமான பாசத்தோடு என்னுடைய சகோதரி வளர்த்து விட்டதால் அவர்களை தான் அம்மா அப்பா என்று மனதில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அப்படியே வாழ்ந்து வருகிறார்” என கூறியுள்ளார்.
