கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் பாகிஸ்தான்

0
254

பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் அந்நாட்டில் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 300 ரூபாவை தாண்டியுள்ளது. பெட்ரோல் 305.56 ரூபாய்க்கும், டீசல் 311.54 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மின் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் அரசாங்கத்தை எதிர்த்து அந்நாட்டு வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அண்மைய தினங்களாக பாகிஸ்தானில் நாடு முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வணிகர்கள், தொழில் அமைப்புகள், சந்தை கூட்டமைப்புகள், போக்குவரத்துத் துறையினர், வழக்கறிஞர்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பாகிஸ்தானின் வணிக மையமான கராச்சி நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள வரும் நிலையில் அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழலை தற்போது நாடு சந்தித்து வருகிறது.

மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச செலாவணி நிதியத்திடமும், நட்பு நாடுகளிடமும் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக 1.2 பில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.