இதனால்தான் எலோன் மஸ்க் ட்விட்டரில் இருந்து பராக் அகர்வாலை நீக்கியதால்?

0
219

2022 ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை ரூ 37 ஆயிரம் கோடிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரான எலான் மஸ்க் வாங்கியதும், முதல் வேலையாக பராக் அக்ரவாலை பணிநீக்கம் செய்தார்.

டுவிட்டரின் லாபத்தை பெருக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தற்போது வரை எடுத்து வரும் மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றம் செய்திருக்கிறார். அக்ரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது.

இவ்வாறான நிலையில் எலான் மஸ்க்கின் வாழ்க்கை சரிதத்தை வால்டர் ஐசக்ஸன் என்பவர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் வரும் வாரங்களில் வெளியிடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

டுவிட்டரில் இருந்து பராக் அக்ரவாலை இதனால்தான் எலான் மஸ்க் பணிநீக்கம் செய்தாரா? | Twitter X Parag Agrawal Termination Elon Musk

குறித்த புத்தகத்தில் பராக் அக்ரவாலை, எலான் மஸ்க் நீக்கியதற்கான காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எலான் மஸ்க், பராக் அகர்வால் தொடர்பில் என்ன நினைத்தார் என வால்டர் எழுதியுள்ளார்.

“அக்ரவால் ஒரு ‘நல்ல மனிதர்.’ ஆனால், ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு ‘நல்ல மனிதர்’ எனும் குணம் மட்டும் போதாது. மக்களால் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி விரும்பப்பட வேண்டும் எனும் அவசியமில்லை. நெருப்பை உமிழும் டிராகனை போல் உள்ள ஒரு தலைமை தான் டுவிட்டருக்கு தேவை. அந்த குணம் பராக் அக்ரவாலிடம் இல்லை” இவ்வாறு மஸ்க் கருதியதாக வால்டர் ஐசக்ஸன், மஸ்கின் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

டுவிட்டரில் இருந்து பராக் அக்ரவாலை இதனால்தான் எலான் மஸ்க் பணிநீக்கம் செய்தாரா? | Twitter X Parag Agrawal Termination Elon Musk

கடந்த அக்டோபரில் பராக்கை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை தானே அந்த பொறுப்பை வகித்து வந்தார்.

இதேவேளை கடந்த 2023 ஜூன் மாதம், விளம்பர துறையில் வல்லவரான லிண்டா யாக்கரினோ எனும் பெண்மணியை நியமித்த பிறகு மஸ்க் அந்த பொறுப்பில் இருந்து விலகி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.