“என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” கில்மிஷாவின் குரலில் இசை மழையில் நனைந்த அரங்கம்!

0
312

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர்களான கில்மிஷா மற்றும் அசானி ஆகிய இருவரும் தங்களின் திறமையால் ஒவ்வொரு வாரமும் நடுவர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

இந்த வாரம் சிறுமி கில்மிஷா “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” என பாடி பலரையும் சிலிர்க்க வைத்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருக்கும் கில்மிஷா தன்னுடைய குரல் வளத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த பாடலை ஜீ தமிழ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், கில்மிஷாவுக்கு பாராட்டும், ஆதரவும் குவிந்து வருகின்றது.