இலங்கையில் எனக்கான பொறுப்புகளும் பணிகளும் அதிகரித்து விட்டன: மனோ கனேசன்

0
243

இலங்கையில் எனக்கான பொறுப்புகளும் பணிகளும் அதிகரித்து விட்டன என நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கனேடிய தமிழர் பேரவை நேற்று(03.09.2023), நேற்று முன்தினம்(02.09.2023) கனடாவில் நடத்திய ‘தமிழர் திருவிழா 2023’ நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் எனக்கான பொறுப்புகளும் பணிகளும் அதிகரித்து விட்டன: மனோகனேசன் | Manokanesan In The Canadian Tamil Festival

“கனடாவிற்கு நான் இந்தத் தடவை கனேடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பெற்ற திருவிழாவிற்காகவே அழைக்கப்பட்டேன்.

ஆனால் நான் இங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில் கனடாவில் உள்ள பல தரப்பினரிமிருந்தும் அமைப்புக்களிடமிருந்தும் நான் செவிமடுத்த கருத்துக்களை தாயகத்திற்கு காவிச் செல்கின்றேன்.

இலங்கையிலும் எனக்கான பொறுப்புகளும் பணிகளும் அதிகரித்து விட்டன” என அவர் தெரிவித்துள்ளார்.