பாடசாலை நேரத்தை நீட்டிக்க யோசனை முன்வைப்பு..

0
303

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாடசாலை நேரத்தை நீட்டிக்க யோசனை முன்வைப்பு | Proposal To Extend School Hours

பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.