இலங்கையில் திறக்கப்பட்டுள்ள சீனாவின் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம்..

0
317

இலங்கையில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்றைய தினம் (30-08-2023) திறந்து வைத்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இணைந்து கொண்ட சீனாவின் சினோபெக் நிர்வாகத்திடம், கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ளூர் முகாமையாளரால் நடத்தப்பட்டு வந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று முதல் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கையில் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையம்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் எதிர்காலத்தில்,150 பெற்றோல் நிலையங்கள் சினோபெக் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும்.

மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அவர்கள் செயற்படுத்தவுள்ளனர்.