வருடத்தில் ஒரே ஒருநாள் மட்டுமே திறக்கப்படும் அதிசய கோயில்!

0
272

கோவில்களுக்கு பிரபலமான இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் இருக்கின்றன. கோவில் என்றால் பெரும்பாலும் தினமுமே திறந்திருக்கும். ஒரு சில நாட்களில் மட்டுமே பூட்டி வைத்திருப்பார்கள்.

ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கக்கூடிய கோவில் ஒன்று உள்ளமை பெரும் ஆச்சரியத்தை தோற்றுவித்துள்ளது. இந்தியாவின் உத்தரகாண்ட் தேவபூமி என்று அழைக்கப்படுகிறது.

Vanshi Narayan kovil uttarakhand

ரக்ஷா பந்தன் அன்று மட்டுமே திறக்கப்படும் கோவில்

அம் மாநிலத்தின் ஒவ்வொரு மலையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கோவில்கள் ஒவ்வொன்றிற்கும் அதன் சொந்த கதை உள்ளது. அதன்படி உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஊர்கம் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கோயிளுக்கும் ஒரு தனித்துவமான கதை உள்ளது.

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், வருடத்தில் 364 நாட்களும் பக்தர்கள் இங்கு வழிபட முடியாது.

இந்த ஆலயத்தின் கதவுகள் வருடத்தில் 1 நாள் மட்டுமே அதாவது ரக்ஷா பந்தன் அன்று மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுமாம். அந்த ஒரு நாளில் மட்டுமே பக்தர்கள் தங்கள் கடவுளை தரிசிக்கவும் வழிபடவும் முடியும்.

raksha bandhan

உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்த கோயிலின் பெயர் வன்ஷி நாராயண் கோயிலாகும், இதன் கதவுகள் ரக்ஷா பந்தன் நாளில் 1 நாள் மட்டுமே திறக்கப்படும்.

பஞ்ச கேதாரங்களில் ஒன்றான கல்பேஷ்வர் மகாதேவ் கோயிலில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும், தேவ்கிராமில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் இந்த தனித்துவமான கோயில் அமைந்துள்ள இந்த கோவில் ரக்ஷாபந்தன் நாளில், சூரிய உதயம் ஆகும் போது கோவிலின் கதவுகள் பக்தர்களுக்காக திறக்கப்படுகின்றன,

அன்றையதினம் சூரிய அஸ்தமனத்துடன் இந்த கோவில் நடை மூடப்படுகிறது. அதன்பின்னர் கோவிலின் அடுத்த திறப்பு அடுத்த வருடம் ரக்ஷாபந்தன் நாளில் தான் என்றும் கூறப்படுகின்றது.

Vanshi Narayan kovil uttarakhand

விஷ்ணுவுக்கு ராக்கி கட்டி மகிழும் பெண்கள்

கடவுளை வழிபடுவதில் பாலின பாகுபாடு இல்லை என்றாலும், சகோதரத்துவத்தை கொண்டாடும் ரக்ஷா பந்தன் நாளில் திறக்கப்படுவதாலோ என்னவோ ஆண்களை விட பெண்களும், திருமணமாகாத பெண்களும் வன்ஷி நாராயண் கோவிலில் வழிபடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த தினத்தில் பெண்களும் சிறுமிகளும் விஷ்ணுவுக்கு ராக்கி கட்டி தங்கள் எதிர்காலம் மற்றும் குடும்பத்திற்காக வாழ்த்து பெறுகின்றனர்.

raksha bandhan

கோவிலில் உள்ள ஊர்கம் பள்ளத்தாக்குடன் கிமானா, டுமாக், கல்கோத், ஜகோலா மற்றும் பல்லா ஆகிய பகுதிகளிலிருந்தும் பெண்களும் விஷ்ணுவுக்கு ராக்கி கட்டுவதற்காக கோவிலுக்கு வருகிறார்கள்.

அதேவேளை வரலாற்று தகவல்களின்படி வன்ஷி நாராயண் கோயிலின் கட்டுமானம் 6 ஆம் நூற்றாண்டில் மன்னர் யசோத்வால் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

raksha bandhan

புராண வரலாற்று கதை

ஆனால், வருடத்தின் மற்ற எல்லா நாட்களிலும் பக்தர்கள் தங்கள் இறைவனைத் தரிசனம் செய்யாமல் இருப்பது ஏன்? குறிப்பாக ரக்ஷா பந்தன் தினத்தன்று மட்டும் கோவில் திறக்கப்படுவதும், வழிபடுவதும் ஏன்? என்பதற்கு புராண வரலாற்று கதை ஒன்று உள்ளது.

அதன்படி, மன்னன் மகாபலியின் செருக்கை அழிக்க விஷ்ணு வாமன அவதாரத்தை எடுத்தார்.

மூன்று படி நிலம் கேட்ட பிறகு விஷ்ணு மன்னன் மகாபலி தலை மீது கால் வைத்து அழுத்தி அவரை பாதாளலோக்கிற்கு அனுப்பினார், ஆனால் மகாபலி அவரை இரவும் பகலும் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார். மன்னன் மகாபலியின் வேண்டுகோளின் பேரில், விஷ்ணு பகவான் பாதாள லோகத்தில் அவரது வாயில்காப்பாளராக ஆனார்.

Vanshi Narayan kovil uttarakhand

விஷ்ணு பாதாள லோகத்திலேயே தங்கிவிட்டதால் லட்சுமி தேவி மனமுடைந்தாள். அவர் நாரத முனியிடம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கேட்டபோது, ​​நாரத் முனி மாதா லட்சுமியை ஷ்ராவண மாதப் பௌர்ணமி அன்று பாதாள லோகத்திற்கு சென்று ரக்ஷசூத்திரத்தை மன்னன் மகாபலிக்கு கட்டி விஷ்ணுவை திரும்ப அனுப்புமாறு கேட்க சொன்னார்.

மாதா லட்சுமிக்கு பாதாள லோகத்திற்கு செல்லும் வழி தெரியவில்லை, அதனால் நாரத முனியை தன்னுடன் வரச் சொன்னாள். ஒரு வருடத்தில் 364 நாட்களும் விஷ்ணுவை வழிபடும் நாரதர் அதை விட்டுவிட்டு லட்சுமியுடன் சென்றார்.

mahalaxmi and vishnu

ஆனால் அவர் இல்லாத நிலையில் கல்கோத் கிராமத்தின் ஜாக் பூசாரி விஷ்ணுவை பூஜித்தார். அதனால்தான் வன்ஷி நாராயண் கோவிலில் கல்கோத் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எப்போதும் பூசாரிகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பாதாளத்திற்கு சென்ற பிறகு, மாதா லட்சுமி மன்னன் பாலிக்கு ரக்ஷா பந்தன் ராக்கி கட்டி, அதற்குப் பதிலாக விஷ்ணுவை விடுவித்தார் என்று புராண கதை கூறுகின்றனவாம்.

அன்று தான் விஷ்ணு மீண்டும் அவரது இருப்பிடத்திற்கு திரும்பினார். அதனால் தான் அவரது விடுதலை தினமான ரக்ஷா பந்தன் மட்டும் இந்த கோவில் திறக்கப்படுகிறதாம்.