தோல்வி பயத்தாலேயே உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்தாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இழுத்தடித்து வருகின்றார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்ளாட்சி சபைத் தேர்தல் நடைபெற்றால் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பது ஜனாதிபதிக்கு தெரியும். மாகாணசபைத் தேர்தலிலும் அதே கதிதான். அவ்வாறு நடந்தால் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு இடம் கிடைக்காது என்பதும் ரணிலுக்கு தெரியும்.
அதனால்தான் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முற்படுகின்றார். தேர்தலை இழுத்தடிக்கும் ரணிலின் முயற்சியை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் மட்டும் எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்படும் எனவும் அநுர குறிப்பிட்டார்.