நாட்டில் இன்றைய தினம் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான ப்ரீ ஸ்ரைல் ( free style ) நீச்சல் போட்டியில் புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவன் இரண்டாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
புங்குடுதீவு மத்திய கல்லூரியில் கல்வி கற்று வரும் பிரபாகரன் சுலக்சன் என்ற மாணவனே இவ்வாறு வெற்றிப்பெற்றுள்ளது.
இம் மாணவனுக்கும் இவரின் திறமையினை நிலைநாட்ட உறுதுணையாகச் செயற்பட்ட உடற்கல்வி பாட ஆசிரியர் சத்தியசீலன் நிசாந்தன் மற்றும் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் பிரசாந்த் ஆகியோருக்கும் புங்குடுதீவு மக்கள் சார்பாக நன்றிகளை குணாளன் கருணாகரன் என்பவர் முகநூலில் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த மாணவனுக்கு முகநூலில் பாராட்டுக்கள் குவித்த வண்ணம் உள்ளன.