இலங்கையில் இருந்து சென்று பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிவரும் அசானிக்கு தமிழகத்தை சேர்ந்த நடிகர் ஒருவர் உதவுதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பணப் பிரச்சினையால் இந்த நிழ்ச்சிக்கு தாமதமாக சென்ற இலங்கை சிறுமி அசானி ஏமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது என்பதற்காக, சரிகமப நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு மற்றும் நடுவர்களால் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சரிகமப இலங்கை தமிழ் சிறுமி அசானி
இதனைத்தொடர்ந்து அசானி மூன்று வாரமாக பாடியுள்ளார். இந்நிலையில் இன்னும் இரண்டு வாரங்கள் பாடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அசானிக்கு இலங்கை தொழிலதிபர் ஒருவர் வீடு கட்டி கொடுப்பதாகவும், மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உதவ முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

சிறுமி அசானிக்கு உதவும் நடிகர் பா. விஜய்
மேலும் தமிழகத்தை சேர்ந்த பாடலாசிரியரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான விஜய் அசானிக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அசானிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கின்றேன், முடிந்த அளவு உதவிகளை நான் அவருக்கு செய்வேன் என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அசானி முதல்முறையாக பாடும் போது அதை பார்த்து நான் கண்கலங்கி விட்டேன், அவரின் வறுமையான குடும்ப பின்னணி சோகத்தை ஏற்படுத்தும் வகையில் வலி நிறைந்துள்ளது, அதை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருந்தது, எனவே என்னால் முடிந்த உதவியை அவருக்கு செய்வேன் என விஜய் அவர்கள் கூறியுள்ளார்.