தாய்லாந்திலிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்க உத்தரவு
வத்தளை மாபொல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை சந்தேகநபர் வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பைகளை சோதனையிட்டபோதே 14 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான வர்த்தகர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.