உலக தடகள சாம்பியன்ஷிப்: 100×4 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்கா

0
262

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100×4 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் அமெரிக்கா அணி தங்கபதக்கத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் அமெரிக்கா அணி 100×4 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியை 37.36 வினாடிகள் ஓடி நிறைவு செய்தது.

இந்த போட்டியில் அமெரிக்கா அணி சார்பில் நோவா லைல்ஸ், கிறிஸ்டியன் கோல்மேன், பிரெட் கர்லி மற்றும் பிராண்டன் கார்ன்ஸ் ஆகியோர் பங்குபற்றினர்.

இந்த அஞ்சல் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கத்தை இத்தாலியும் வெண்கலப் பதக்கத்தை ஜமைக்காவும் வென்றன. மேலும் இந்த போட்டியின் வென்ற பதக்கத்துடன் சேர்த்து நோவா லைல்ஸ் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளார்.

Noah Lyles
Noah Lyles