FIFA மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது ஸ்பெயின்

0
491

FIFA மகளிர் உலகக்கிண்ண இறுதி போட்டியில் வெற்றி பெற்று ஸ்பெயின் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

அவுஸ்திரேலியாவில் உள்ள அக்கோர் மைதானத்தில் (Accor Stadium) நேற்றைய தினம் ஆரம்பமாகிய குறித்த போட்டியில் ஸ்பெயின் அணியை இங்கிலாந்து அணி எதிரிகொண்டது.

இந்த போட்டியின் முதல் பாதியில் ஸ்பெயின்அணி வீராங்கனையான ஓல்கா கார்மோனா (Olga Carmona) 29வது நிமிடத்தில் அணிக்கான முதலாவது கோலை பதிவு செய்தார்.

முதல் பாதியில் இங்கிலாந்து அணியால் எந்த ஒரு கோலையும் பதிவுசெய்ய முடியாமல் போனது. இரண்டாவது பாதியில் இரு அணிகளினாலும் கோல்கள் எதுவும் பதிவு செய்ய முடியாமல் போனது