மின்சாரம் வழங்குவதில் சிக்கல்; பொது மக்களிடம் கோரிக்கை

0
343

இலங்கையில் மிக நீளமான மின்சாரம் கடத்தும் கட்டமைப்பின் ஊடாக மின்சாரம் வழங்குவதற்கு பட்டங்கள் தடையாக இருப்பதாக திட்டப்பணிப்பாளர் அனுருத்த திலகரத்ன தெரிவித்தார்.

பொல்பிட்டியில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான 150 கிலோமீற்றர் தூரத்திற்கு செல்லும் பகுதியில் இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மின்விநியோக பாதைக்கு அடுத்த வாரம் மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு இடையூறு


மின்சாரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் - பொது மக்களிடம் விசேட கோரிக்கை | Power Supply Problem Sri Lanka People

ஆனால் பட்டங்கள் பணிக்கு இடையூறாக உள்ளதால், அந்த பகுதிகளில் பட்டம் பறக்கவிட வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், பட்டங்கள் பறக்கும் தங்குஸ் கயிறு இந்த மின் கம்பிகளில் சிக்கியதால் மின்சாரம் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக திட்டப்பணிப்பாளர் அனுருத்த திலகரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.