குருந்தூர்மலை பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு

0
261

குருந்தூர் மலை பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று இடம்பெறவுள்ள குருந்தூர்மலை பொங்கல் வழிபாடு குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று (18.08.2023) காலை பொங்கல் வழிபாடு இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர்.

சைவ வழிபாடுகளுக்கு தடையில்லை 

இந்த விடயமானது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில், தொல்லியல் திணைக்களம் சைவவழிபாடுகளை மேற்கொள்வதற்கு தடையில்லை எனத் தெரிவித்திருந்தது.

பொங்கல் வழிபாட்டை தடுப்பதற்கு இறுதிவரை பலரால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பொங்கல் வழிப்பாட்டை தடுப்பதற்கு அதிகாரம் இல்லை என இன்றும் முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.

அத்துடன் பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளது. எனவே பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் எமக்கான உரிமைகளை மீட்டெடுக்கவும் எமது மரபுகளை பேணிக்காக்கவும் மக்கள் அனைவரும் குருந்தூர்மலைக்கு இன்று வருகை தந்து பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் இங்கே எமது வரலாறுகளை மறைக்கும், மழுங்கடிக்கும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.