இறுதிவரை போராடி உயிர்நீத்த விடுதலைப் புலிகளின் தலைவர்! பழைய புகழ் ஒன்றும் இல்லை – நினைவு கூர்ந்த பிள்ளையான்

0
181

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அன்று நாங்கள் நேசித்தோம். எவ்வாறாயினும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிருப்தி அளித்தமையால் இயக்கத்தில் இருந்து விலகிக் கொண்டோம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைசி வரை போராடி மரணித்துப் போனார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல அழிவுகளையும் இழப்புக்களையும் நாம் சந்தித்திருக்கின்றோம்.

உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்

கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்! பழைய புகழால் பயன் இல்லை - நினைவுகூரும் பிள்ளையான் | Ltte Leader Prabhakaran And Pillaiyan

உண்மையில் அடைய முடியாத இலக்குகளுக்காக அழிந்து போயிருக்கின்றோம். எனவே அடைந்தவற்றையாவது இனி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர பழைய புகழையே பாடுவதால் எந்தப் பயனும் இல்லை.

கடந்த காலங்களில் வன்முறை கலாசாரம் விரும்பியோ விரும்பாமலோ எமது சமூகத்திற்குள் திணிக்கப்பட்டது. இறுதியில் அது இயலாமையில் முடிந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் வன்முறைத் தலைவர்களைப் பற்றி சிந்திப்பது இனியும் பொருத்தமான விடயமே அல்ல. வன்முறைக்கான தேவைப்பாடு இனி மக்கள் மத்தியில் எழாது என்று குறிப்பிட்டுள்ளார்.