தென்னாப்பிரிக்க பெண்ணை கரம் பிடித்த தமிழக இளைஞர்

0
242

தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை தமிழக இளைஞர் கரம் பிடித்துள்ளார். தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் செல்லதுரை.

இவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். அவருடன் பணியாற்றும் மென்பரே என்ற பெண்ணுடன் செல்லதுரைக்கு காதல் மலர்ந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தாருக்கும் தெரிந்த நிலையில் பச்சைக்கொடி காட்டினர்.

இதையடுத்து செல்லதுரை தனது காதலி மென்பரேவை தமிழ் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.