நல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிப்பு இன்று!

0
222

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும்

மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றை திருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிப்பு! | Kalanji Gift For Nallur Kandan S Birthday

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிப்பு! | Kalanji Gift For Nallur Kandan S Birthday