தக்காளியால் 40 இலட்சத்தில் கார் வாங்கிய விவசாயி..

0
246

இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலையால் விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்கள் ஆன சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்த வகையில் தக்காளி விற்பனை செய்து கிடைத்த இலாபத்தில் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் வாங்கி உள்ளார் விவசாயி ஒருவர்.

தக்காளியால் வந்த பணம் வரவுள்ள மணப்பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜேஷ் என்பவரே இவ்வாறு கார் வாங்கியுள்ளார். அத்துடன் தனக்கான மணப் பெண்ணையும் தேடி வருவதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இன்னும் சில மாதங்களுக்கு தக்காளி விலை இதே உயர்வில் இருந்தால் ஒரு கோடி வரை சம்பாதித்து விடுவேன் என்றும் அவர் பேட்டி அளித்துள்ளார்.