தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.
இடையில் அவரின் சினிமா மார்க்கெட் சரிந்திருந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் மீண்டும் பிரபலமாகிவிட்டார்.
இந்த நிலையில் கேரள மாநிலத்தின் கொல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமன்னா கலந்து கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் பாதுகாவலர்களை தாண்டி வந்து அவரது கையை பிடித்துவிடுகிறார்.
இதையடுத்து பாதுகாவலர்கள் அவரை பிடித்து வெளியில் தள்ள முயன்றனர். ஆனால், தமன்னாவோ தனது ரசிகரின் அன்பை புரிந்து கொண்டு அவருக்கு கைக்கொடுத்து செல்பி எடுத்து அனுப்பி வைத்தார். தமன்னாவின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.