இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா? பீட்டர் இளஞ்செழியனின் கேள்வி

0
252

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குள பகுதியில் இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மணல் அகழ்வு சம்பவமானது நேற்று (05.08.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வு

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் , நானும் அவ்விடத்திற்கு கள விஜயம் செய்த போது மணல் அகழ்வில் ஈடுபட்டிருப்பதனை அவதானித்திருந்தோம்.

தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலை பகுதியில் காவல் கடமையில் நிற்கும் இரு பொலிஸார் குறித்த மண் அகழ்வினை வேடிக்கை பார்த்து நின்றனர்.

இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா! பீற்றர் இளஞ்செழியன் கேள்வி(Photos) | 29 Sinhalese Arrested Illegal Fishing Pond

இராணுவத்திற்கு ஒரு சட்டமும், மக்களுக்கு இன்னொரு சட்டமுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை பொலிஸாரும் சட்டவிரோத மண் அகழ்விற்கு உடந்தையாக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

Gallery
Gallery
Gallery